களைகட்டிய ஆட்டுச் சந்தை, 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.!
கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 கோடி ரூபாய் விற்பனை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனையாகும். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில், வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
பண்டிகை காலங்களில் மட்டும் கூடுதலாக விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று ஆட்டுச் சந்தை விற்பனை களைகட்டியது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
இங்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
What's Your Reaction?