தூத்துக்குடியில் துவங்கப்பட்ட பர்னிச்சர் பார்க்., உடைந்த நாற்காலி கூட இல்லை.. பிறகு எப்படி முதலீட்டாளர்கள் வருவார்கள்.. பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி.!

Jan 6, 2025 - 11:18
Jan 6, 2025 - 11:25
 0
தூத்துக்குடியில் துவங்கப்பட்ட பர்னிச்சர் பார்க்., உடைந்த நாற்காலி கூட இல்லை.. பிறகு எப்படி முதலீட்டாளர்கள் வருவார்கள்.. பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி.!

மருத்துவ வாகன சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி துவக்கி வைத்தார்.. 

மத்திய அரசின் மகா ரத்னா என்டர்பிரைசஸ் சார்பில் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியுடன் இணைந்து தூத்துக்குடியில் மருத்துவ வாகன சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை இந்திய அரசின் மகா ரத்னா என்டர்பிரைசஸ் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவருமான நாராயணன் திருப்பதி துவக்கி வைத்தார்.. 

இதனைத் தொடர்ந்து, அவர் கூறும்போது, தமிழக முதல்வர் பங்கேற்ற விழாவில் கல்லூரி மாணவிகளிடமிருந்து பெண்களின் கவசமாக இருக்கின்ற கருப்பு துப்பட்டா பறிக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. கருப்பு கலர் துப்பட்டா அணிந்து வருவதில் அச்சம் இருந்தால் முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் வேறு கலரில் 100 துப்பட்டா வாங்கி கொடுக்கலாம் இதில் தவறில்லை..

வின்பாஸ்ட் நிறுவனம் ஓராண்டுக்குள் பணிகள் முடிந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் பணிகள் முடிவடையவில்லை. தூத்துக்குடியில் துவங்கப்பட்ட பர்னிச்சர் பார்க்கில் ஒரு உடைந்த நாற்காலி கூட இல்லை. பிறகு எப்படி முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள்..

அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு., யாருடன் யார் கூட்டணி வைப்பார்கள் என்று தேர்தல் காலத்தில் தான் தெரியும் என்றார்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow