நாட்டை அவமானப்படுத்தும் திமுக அரசு.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு.!

திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் பராமரிப்பு, சீரமைப்பு செய்யப்படவில்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..!
வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி: திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு செய்யப்படவில்லை.
பல மணிமண்டபங்களில் பணியாளர்கள் இல்லாத நிலை தான் உள்ளது. அதேபோன்று பல மணிமண்டபங்களில் நூலகங்களும் அமைக்கப்படவில்லை. இது நாட்டை அவமானப்படுத்தப்படும் செயல், தலைவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் கௌரவம் இதுதான்.
வாழுகின்ற மக்களையே ஒழுங்காக வாழ வைக்கவில்லை. வாழ்ந்து மறைந்த தலைவர்களை இவர்கள் இப்படித்தான் நடத்துவார்கள் என்பதற்கு இந்த ஆட்சி ஒர் உதாரணமாக உள்ளது என்றார்..
What's Your Reaction?






