கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுப்பு.., மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

கள்ள ஓட்டு போட அனுமதிக்காததால் ஒரு குடும்பத்தை மட்டும் ஐந்து ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம்.., கார்டு, ஓட்டர் ஐடி, குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்..
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம்., இவர் கடந்த முறை நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியுள்ள நிலையில், கொச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் பூத் ஏஜெண்டாக இருந்த சிவஞானம் கள்ள ஓட்டு போடுவது தவறு, போடக்கூடாது என வந்தவர்களை அறிவுரை கூறி தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் கள்ள ஓட்டு போட அனுமதிக்காமல் தடுத்ததால் பஞ்சாயத்து தலைவி சுந்தரலட்சுமி அவரது கணவரின் தூண்டுதலின் பேரில் மற்றும் ஊர் கமிட்டியினர் சேர்ந்து சிவஞானம் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு நீர் வரக்கூடிய வாய்க்கால்களையும் அடைத்து விட்டதாக கூறும் இவர்கள் தங்களது வயல்களில் வேலை செய்வதற்கு கிராம மக்கள் யாரையும் அனுமதிக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகுந்த மன வேதனைக்கு உள்ளதாக கூறும் சிவஞானம் குடும்பத்தினர் கடந்த 2020 ஆம் ஆண்டு இது சம்பந்தமாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கோவிலில் சாமி கும்பிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் மிகுந்த மன உளைச்சலான நிலையில் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்துள்ளார்..
மேலும், மாவட்ட ஆட்சியர் விரைந்து தங்களுக்கு மனரீதியான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?






