உணர்ச்சிகள் இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடிய மாணவிகள்.. சமூக நலத்துறை அமைச்சர் சொன்ன அந்த சொல்.!

Jan 3, 2025 - 14:44
Jan 3, 2025 - 14:57
 0
உணர்ச்சிகள் இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடிய மாணவிகள்.. சமூக நலத்துறை அமைச்சர் சொன்ன அந்த சொல்.!

தமிழர்கள் தமிழ் மொழியை பேசுவதற்காக பெருமைப்பட வேண்டும்.. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் பொருநை இலக்கிய திருவிழா 2025 இன்று தொடங்கியது. வ உ சி கல்லூரியில் தொடங்கிய இத்திருவிழாவை, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்..

அப்போது, சமூக நலத்துறை  அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கீழடி அகழாய்வுகள் மூலமாக தமிழகத்தின் நாகரிகம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது.

தமிழர்கள் தமிழ் மொழியை பேசுவதற்காக பெருமைப்பட வேண்டும்.. ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மாணவிகள் உணர்ச்சி இல்லாமலே பாடினார்கள். இனி ஓங்கி குரலை உயர்த்தி பாட வேண்டும் என கேட்டு கொண்ட அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி தூத்துக்குடியில் தான் கடலோடு கலக்கிறது என்பதால் பொருநை இலக்கிய திருவிழா இங்கு நடத்துவது ஏற்புடையது என்றார்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow