மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் ரத்து., தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

Jan 13, 2025 - 07:15
Jan 13, 2025 - 07:15
 0
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் ரத்து., தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் வேண்டாம் என்று தெரிவித்த தமிழக அரசை கண்டித்து விரைவில் போராட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.!

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பிளாஸ்டிக் லைட்டர்களை மாநில அரசு தடை செய்து, தீப்பெட்டி தொழிலலை பாதுகாக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரை நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்:

காட்டு பன்றிகள் தொல்லை: காட்டுப்பன்றிகள் தொல்லை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக சார்பில் நான், மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் உள்பட 7 பேர் கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் கொடுத்து இருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச கட்சி ஒருவருக்கு என அதிமுக சார்பில் செங்கோட்டையன் பேசினார். இதற்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி காப்பு காட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை வந்தால் காட்டுப்பன்றியை விரட்டி விடலாம் 3 கிலோ மீட்டர் தூரம் தாண்டி வந்தால் சுடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். யார் சுட வேண்டும் என்று கேள்வி எழுப்பிய போது முதல்வரிடம் ஆலோசித்து அறிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் லைட்டரை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். தென்மாவட்டத்தில் பிரதான தொழிலாளாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி மூலம் அரசுக்கு 1200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் கிடைக்கிறது. அந்நிய செலவாணி மூலமாக 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. விவசாயத்திற்கு மாற்றாக இப்பகுதியில் தீப்பெட்டி தொழில் உள்ளது. தீப்பெட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்ட போது, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜெயக்குமார் ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி, தானும் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்தேன். இதனை தொடர்ந்து, ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்ப்டது.

தற்பொழுது தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர் உள்ளது. இதனை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரும் மத்தியரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனால் பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களுக்கு மத்தியரசு தடை விதித்துள்ளது. மூலப்பொருள்களுக்கு தடைசெய்யப்பட்ட போதிலும் கள்ளச்சந்தையில் பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தீப்பெட்டி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படமால் இருந்தால் அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நல வாரியத்தில் இணைத்து இருப்போம், ஆனால் திமுக அரசு அதை செய்யவில்லை, அதற்கு என்று அதிகாரிகள் உள்ளனர். ஆனால் கணக்கெடுப்பு செய்து தீப்பெட்டி தொழிலாளர்களை நலவாரியத்தில் இணைக்க வேண்டும். இனியும் அரசு மொத்தனபோக்காக இல்லமால் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்களை சேர்க்க வேண்டும்.

மதுரை - தூத்துக்குடி இடையே ரெயில் திட்டம் ரத்து: மதுரை - தூத்துக்குடி இடையே ரெயில் திட்டம் கடந்த 2011 -12ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியினால் கொண்டு வரப்பட்டது. 2054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 143 கிலோ மீட்டர் தொலைவிற்கு திட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதிமுக ஆட்சியில் நிலம் எடுத்து கொடுக்கப்பட்டது போல மதுரை - தூத்துக்குடி இடையிலான ரெயில் திட்டத்திற்கும் 18 கிலோ மீட்டர் தூரம் நிலம் எடுப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நில எடுப்பு பணிக்காக விளத்திகுளம், திருப்பரங்குன்றத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டது தவிர நில எடுப்பு பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசிடம் கடிதம் வந்த காரணத்தினால் மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்தினை கைவிட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கேட்டு அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பல ஆண்டுகள் கனவு திட்டமான இந்த திட்டம் நிறைவேறினால் தங்கள் ரெயிலில் பயணிக்கலாம் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தனர். இதில் யார் அரசியல் செய்தாலும் கண்டிக்கதக்கது. மத்தியரசினை குறைசொல்லி திமுக தப்பித்துக்கொள்ள கூடாது.

கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று என்ன செய்தார்கள். இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் என்று மாநில அரசு கூறினால் விளாத்திகுளம், திருப்பரங்குன்றத்தில் அலுவலகங்களை மூடியது ஏன் என்று அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் தர வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தி அதிமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். 

அண்ணா பல்கலைகழக விவகாரம்: அண்ணா பல்கலைகழக விவகாரத்தினை திசை திருப்பவே ஆளுநரை கண்டித்து திமுக போராட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தினை குறைந்த பட்சம் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த வேண்டியது தானே 'யார் அந்த சார்? என்று கேட்டால் முதல்வர், அமைச்சர்கள் அச்சம் கொள்கின்றனர் . அதற்கு விடை கிடைக்கும் வரை அதிமுக போராடும். இதனை சொன்னால் பொள்ளாச்சி சம்பத்தினை கூறுகின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக அரசு சரியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தான் அதிமுக அங்கு மீண்டும் வெற்றி பெற்றது. பொள்ளாச்சி சம்பத்திற்கு சிபிஐ விசாரணை கேட்ட போது, அதிமுக அரசு தயார் என்று தான் தெரிவித்தது. ஆனால் தற்பொழுது சிபிஐ விசாரணை கேட்டால் திமுக அரசு நீதிமன்றத்தில் மறுக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறுவதில்லை. இதற்கு திருமங்கலம் பார்முலா உதாரணம். இப்போது ஈரோடு கிழக்கு பார்முலா என கூறுகின்றனர். அந்த தொகுதியில் ஒரு இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்து, மாலையில் வீட்டுக்கு செல்லும் போது தினமும் பணம் கொடுத்து, அங்கு வரவில்லையென்றால் உங்களுக்குரிய உரிமைகள் ரத்து செய்யப்படும் என கருத்தை மக்கள் கூறினர்.

இதற்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த யுக்தியை மக்கள் சுற்றுலா அழைத்துச் சென்று, அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்தனர். இப்படி செய்து தான் கடந்த இடைத்தேர்தலில் அங்கு வெற்றி பெற்றனர். இந்த சூழ்நிலையில் நாங்கள் போட்டியிட்டால் அங்குள்ள மக்கள் துன்படுத்துவார்கள். அங்குள்ள மக்களின் நலன் கருதி தான் அதிமுக போட்டியிடவில்லை.

இரட்டை இலை சின்னம் அதிமுகவுடன் தான், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow