அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்., தூத்துக்குடி எம்பி கனிமொழியை கேள்வி கேட்கும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தினை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்டத்தில் வனவிலங்குகள் மற்றும் இயற்கையினால் மானவாரி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தினை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் போராட்ட அறிவிப்புக்கு பின் பயிர்காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டாலும், அதிலும் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும்.
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை என்பது வெட்ககேடான செயல், காயம் ஏற்பட்டால் காயத்தினை குணப்படுத்த வேண்டுமே தவிர மேலும் காயப்படுத்த கூடாது. பல சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. திட்டமிட்டு அவை நிறுத்தப்பட்டதா? என்பது விசாரணையில் தெரியும். யார் அந்த சார்? என்பதனை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம்.
குற்றவாளியை கைது செய்த பின்னும் போராட்டம் ஏன் என்று கனிமொழி எம்.பி கேட்கிறார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கியதும், அதிமுக அரசு மின் இணைப்பினை துண்டித்தது மட்டுமின்றி போராட்டம் தொடங்கிய 28 நாள்களில் ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூடப்பட்டது. ஆலை மூடப்பட்ட பிறகு எப்படி இயங்கும். அன்றைக்கு எதிர்க்கட்சிகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசியல் செய்யமால் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடைபெற்ற அந்த சம்பவம் (துப்பாக்கிசூடு) நடைபெற்று இருக்குமா? மூடப்பட்ட ஆலைக்கு போராட்டம் ஏன் என்று அமைச்சராக இருந்த நான் ஊடகங்களில் பேசியது மட்டுமின்றி, செய்தி குறிப்பும் வழங்கப்பட்டது.
பலமுறை மக்களுக்கு வேண்டுகோள் கொடுத்தோம். பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆலை மூடிய பிறகு போராட்டம் தேவை இல்லை என்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்ட பிறகும் கூட போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், தற்பொழுது அமைச்சராக இருக்கும் கீதாஜீவன் மக்களை துண்டிவிட்டு மக்களை பலியாக்கினார். வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு பிறகு ஏன் போராடிகின்றனர் என்று கேட்கும் கனிமொழி எம்.பி ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகும், அதற்கான அறிவிப்பினை அரசு வெளியிட்ட பிறகும், 100வது நாள் போராட்டம் என்று செயற்கையாக உருவாக்கி, மக்களை துண்டிவிட்டு, மக்கள் பலியானதற்கு காரணம் அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் - இதற்கு என்ன பதில் சொல்வார் கனிமொழி எம்.பி என்றார்..
What's Your Reaction?