ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி, பெண் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு..

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் செல்லும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், தூத்துக்குடி, முத்துநகரில் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ உ சி சிதம்பரனாருக்கு சொந்தமான ஊர்.., பெரும் தலைவர்களுக்கு சொந்தமான ஊர் இந்த தூத்துக்குடி, இந்த மகத்தான திட்டத்தை இங்கு தொடங்கி வைப்பது மகிழ்ச்சி., தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே டாப்பாக உள்ளனர். மார்க் வாங்குவதிலும் சரி, உயர்கல்வியில் சேர்வதிலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களிலும் சரி தமிழக பெண்கள் தான் டாப்..
இன்றைக்கு கல்வியைப் பொறுத்தவரையில் பெண்கள் தான் முதலில் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி இடை நிலையாக இருந்ததா இல்லை.. அனைவருக்கும் கல்வி சட்டமாக்கியது நீதிக்கட்சி தான். இதெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா வந்த பாதையை மறக்காமல் இருக்க வேண்டும். காமராஜர் ஆட்சியில் தான் அதிகபடியான பள்ளிகள் திறக்கப்பட்டது. தலைவர் கலைஞர் முதலமைச்சர் ஆன பிறகு 97 கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவத்தில் தமிழகம் நம்பர் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் சேர்க்கை குறைவாக உள்ளதை அறிந்து புதுமை பெண் திட்டத்தை உருவாக்கினேன். 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதனால் கல்லூரிகளில் மாணவியர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவியரின் படிப்பிற்கு என்ன தடை வந்தாலும் அதை உடைப்பேன். இத்திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி, பெண் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. இதனால் தமிழ்நாட்டைத் தேடி தொழில் நிறுவனங்கள் தொடங்க வருவார்கள். உயர் கல்வி பெறாத பெண்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன்.
திராவிட மாடல் திட்டம் இந்தியாவிற்கு முன்மாதிரியாக உள்ளது.. பெண்களை படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். நானும் அரசும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து இந்த ஆண்டு உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் மாதம் ஆயிரம் பெற்று பயனடைய உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 4,680 மாணவிகள் பயன் அடைகின்றனர் என்பது குறிப்பிடதக்க நிலையில், இந்த விழாவில், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆட்சியர் இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயன் மற்றும் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்கள் கலந்து கொண்டனர்...
What's Your Reaction?






