"ஏ அந்தப் பாட்ட ஆப் பண்ணுங்க" அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் எழுந்த பாட்டு.!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படத்தின் பாடல் ஒலி பரபரப்பான நிலையில் உடனடியாக பாட்டை நிறுத்தச் சொன்ன அமைச்சரின் உதவியாளர்..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணிகள் முடிந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்தார்.
அப்போது, அவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழையகாயல் கிராமத்தில் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.70 லட்சம் மதிப்பில் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைக்க வருகை தந்தார்.
அந்த சமயத்தில் நடிகர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா மைக்கில் "ஏ அந்த பாட்ட ஆப் பண்ணுங்க" என்று இரண்டு முறை அழுத்தமாக கூறினார்.
உடனே பதறியடித்துக் கொண்டு ரேடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை வேகமாக வேகமாக சென்று அணைத்தனர்..
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த படத்தின் பாடல் ஒலிபரப்பான போது எந்தவித சலனமும் இல்லாமல் அமைச்சர் நின்று கொண்டிருந்தார். ஆனால் உணர்ச்சிவசத்தில் அருகே நின்ற உதவியாளர் கிருபா செய்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. சிறிது நேரத்திற்கு பிறகு தான் அங்கிருந்தவர்களுக்கு விவரமே தெரிய வந்தது.
What's Your Reaction?






