படிக்கும் காலத்தில் கள்ளு குடித்துவிட்டு தான் நான் கல்லூரிக்கே செல்வேன்.. நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி..!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் பெரியாரைக் காட்டி ஓட்டு வாங்குவீர்களா? காந்தியை காட்டி ஓட்டு வாங்குவீர்களா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்..!
விழுப்புரத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கள் பதனி குடிக்க அனுமதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கள்ளை இறக்குவோம், முடிந்ததை செய்து கொள்ளுங்கள். பனை மரத்தின் அருமை யாருக்கும் இங்கு தெரியவில்லை. படிக்கும் காலத்தில் கள்ளு குடித்துவிட்டு தான் கல்லூரிக்கே செல்வேன்.. அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை புரிவதை ஆய்வு செய்யாத அரசு டாஸ்மார்க் எவ்வளவு விற்பனையாகிறது என்று ஆய்வு செய்கிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் இரண்டே பேருக்கு தான் போட்டி., நாம் தமிழர், திமுக அங்கு களத்தை எங்கள் களமாக மாற்றுவோம். பெரியார், பெரியார் என்று பேசுகிறவர்கள் பெரியார் மண் என்று பேசுகிறவர்கள் அங்கு பெரியாரைக் காட்டி ஓட்டு வாங்குவீர்களா? காந்தியை காட்டி ஓட்டு வாங்குவீர்களா?
ஈவேராவை எதிர்த்தால் மதவாதமா? பெரியாரை சொல்லிவிட்டால் சங்கி பிஜேபி என்று முத்திரை குத்தப்படுகிறது. ராஜாஜியுடன் கூட்டணி வைத்து நட்போடு இருந்தது யார்? பாஜக ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்தது யார்? பீகார்காரன் பிரசாந்த் கிஷோரை சம்பளம் கொடுத்து தமிழகத்திக்கு கூட்டி வந்து வெற்றி பெற்றது யார்?
ஐஐடி இயக்குனர் கோமியம் குடித்தால் நல்லது என்று சொல்லி இருக்கின்றார் இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? மருத்துவமனைக்கு 2 லிட்டர் கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும்.. பைத்தியக்காரன் நாட்டில நாடும் நாட்டு மக்களும் சிக்கிக் கொண்டு படாதபாடு படுகின்றனர் என்ன செய்வது என்றார்.
What's Your Reaction?






