குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா.., நிலம் எடுப்பு சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தால் 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க 1,500 ஏக்கர் நில எடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது..
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அருகே 1,500 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அதாவது, குலசேகரன்பட்டினத்தில் 950 கோடி ரூபாய் செலவில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1,500 ஏக்கரில் ஆய்வு மையத்திற்கு அருகே தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டது. ராக்கெட் உருவாக்குவதற்கான பொருட்களை வெகு தொலைவில் இருந்து இங்கு எடுத்து வர கூடுதல் செலவுகள் பிடிக்கும் என்பதால் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் ஒரு திட்டத்தைத் தீட்டி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட்களை உருவாக்குவதற்கு தேவையான பொருட்களை, அதற்கு அருகிலேயே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைத்து அங்கு பொருட்களை தயாரித்து வழங்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திட்டமிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுப்பு பணியானது, நான்கு அழகுகளாக பிரித்து 100க்கும் மேற்பட்டோரின் இடங்களை நிலம் எடுப்பு செய்ய உள்ளது. நிலம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?






