நடு ரோட்டில் படுத்து கொண்டு மது பிரியர் செய்த செயல்.., நடந்தது என்ன.!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மது போதையில் சாலையில் படுத்து கொண்டு செல்போன் உபயோகித்து கொண்டிருந்த நபர்.!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக் கருப்பன் மகன் வீரையன் இவர் நேற்று இரவு கோவில்பட்டியில் தனது வேலையை முடித்து விட்டு அரசு புறநகர் பேருந்தில் சொந்த ஊரான கொப்பம்பட்டிக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, வீரையன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிந்த நிலையில், பேருந்து நடத்துனர் வீரையனை கரசகுளம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வீரையன் மது போதையில் நடு ரோட்டில் படுத்து தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் அவரிடம் நீங்கள் எந்த ஊர்? இவ்வாறு நடு ரோட்டில் படுத்து கிடக்கும் பட்சத்தில் உங்கள் மீது வாகனம் ஏற்றினால் என்ன செய்வது என கேட்கிறார். மேலும், ரோட்டை விலைக்கு வாங்கிட்டீங்களா? எனவும் கேட்கிறார். அதற்கு அந்த மது பிரியர் நான் டென்ஷன் ல, பிரச்னை ல இருக்கே நீங்க போங்க என கூறுகிறார். மேலும், வாகன ஓட்டி அவரிடம் எழுந்து போங்க., வாகனம் உங்கள் மீது ஏறினால் என்ன செய்வது என்கிறார். அதற்கு அந்த மது பிரியர் வாகனத்தை என் மீது ஏற்றிவிட்டு போயிடுவானா அவன்., என் மீது வண்டியை ஏற்ற ஒருத்தன் அப்பன் பிறந்து தான் வரணும் என்கிறார். பின்னர், வாகன ஓட்டிகள் இருவர் அவரை மீட்டு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் படுக்க வைத்துள்ளனர்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
What's Your Reaction?






