வந்து பாரு - தொட்டு பாரு என திமுக, பாஜக குழாய் அடி சண்டை. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேச்சு..!

வந்து பாரு - தொட்டு பாரு என திமுக, பாஜக குழாய் அடி சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர்- முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கோவில்பட்டியில் பேச்சு..!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில்: நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக போராடியது. எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவினை நனவாக்கும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்த சமூக நீதி காவலர். விளம்பர வெளிச்சத்தில் விழாக்களை நடத்தும் முதல்வர் மு.க ஸ்டாலின் எங்கள் ஆட்சி சாதனையை அவர் சாதனையாக கூறுகிறார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கல்விக்கு நிதி வாங்கி கொடுங்கள் என்றால் என் ஏரியா பக்கம் வந்து பாரு-தொட்டுப்பார் என்று இன்றைக்கு குழாய் அடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் (திமுக -பாஜக) மாணவர்களுக்கு கல்வி நிதி பெற்று தர திமுகவிற்கு யோக்கியதை இல்லை. உதயநிதி ஸ்டாலின் என்ற அரைவேக்காடு வந்து பாரு-தொட்டுப் பாருன்னு பேசுகிறார். கல்விக்கு நிதி வாங்க முடியாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் வீட்டிற்கு முன் நின்று கோலம் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்விக்கு நிதி பெற்று தர முடியாத முக ஸ்டாலின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
மக்களிடம் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இன்னும் எத்தனை நாடகங்களை இந்த திமுக மக்களிடையே அரங்கேற்ற போகிறது. நீட் தேர்வு ரகசியம் எங்களது பாக்கெட்டில் இருப்பதாக கூறினார்கள். தங்கமலை ரகசியமாக வைத்திருக்கும் அந்த ரகசியத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று நாங்கள் பலமுறை கேட்டு விட்டோம். அதனை வெளியிடுவதற்கு யோக்கியதை இல்லை.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் என்றார்.
What's Your Reaction?






