அடிதடி பிரச்சனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு.!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆலந்தா கிராமத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை. காவல்துறை கண்டுகொள்ளவில்லை குற்றச்சாட்டு.!
நடந்தது என்ன..!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவருக்கு அங்கு தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், தொடர்ந்து ஒரே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் சுந்தர்ராஜ் மீது தனிப்பட்ட ஓர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 6ந் தேதி சுந்தர்ராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்த பொண்ணு சாமி மகன் பரமசிவம் (34), செல்வராஜ் மனைவி பேச்சியம்மாள் (40), மாடசாமி மகன் (29), பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் சுடலை மணி, சுப்பையா மகன் முருகன், வன்னியன் மகன் சின்னதுரை, சுடலை மாடன் மகன் சின்னத்திரை ஆகிய நபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, தாக்குதலுக்குள்ளான நபர்களின் குடும்பத்தினர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.
What's Your Reaction?






