தமிழகம் போக்சோ மாநிலமாக மாறும்-பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தால் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்-முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் பேட்டி.!
முன்னாள் பாஜக மாநில பொது செயலாளர் SR.சரவணப்பெருமாள் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜகவின் மூத்த உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து, கட்சியினர் கட்சி நுழைவு வாயிலில் நின்று 'ஸ்டாலின் வெளியே போ' என்று பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், பெற்றோர்கள் குழந்தைகளை கொள்வது என ஏராளமான குற்றங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இதனை பொருட்டாக அரசு எடுக்கவில்லை யாரும் கவலைப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும். உலக நாடுகள் இவ்வாறு பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவார்கள். இந்த நிலையிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு, இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லை போக்சோ நாடு தான் தேவை என்றால் போக்சோ நாட்டினுடைய முதலமைச்சராகவும், அமைச்சராகவும், இந்த காவல்துறையால் பெருமைப்படுகிறது என்று சொன்னால் 2026 நெருங்குவதற்குள்ளாக இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.
இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? நரேந்திர மோடி ஆளுமைக்கு கீழ் வந்த பின்பு தான் கொலைகள் நடப்பது இல்லாமல் போனது. தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் இலங்கைக்கும் பாதிப்பு இல்லை, நமக்கும் பாதிப்பு இல்லை என்றார்.
உடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், மருத்துவ பிரிவு மாநிலசெயளாளர் டாக்டர். ருக்மணி, வர்த்தகபிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், OBC அணி மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச்செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், வடக்கு மாவட்டபொதுச்செயலாலர் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்டதுணை தலைவர்கள் செல்வராஜ், சிவராமன், வாரியார், தங்கம், சரஸ்வதி, நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் தேவகுமார், மாவட்ட செயலாலர் வீரமணி, அர்ஜுன் பாலாஜி, பாப்பா, கனல் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மண்டல தலைவர்கள்., மாதவன், செல்வகுமரன், செல்வசங்கர், சங்கரகுமாரஜயன், தங்ககண்ணன் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்..
What's Your Reaction?






