சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.!

சமுதாய வளைகாப்பு விழா., அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கினார்.!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 200 கர்ப்பிணியருக்கு தாம்பூல தட்டில் புடவை, சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தாய்மை என்பது மிக அறியது, அற்புதமானது. கர்ப்பிணி பெண்கள் அவர்களை மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள வட்டாரங்களில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது.
பெண்கள் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். நாம் 10 கிலோ எடை கூடும்போது 3 கிலோ குழந்தை உடல் எடை கூடும். அப்போதுதான் ஆரோக்கியமாக குழந்தைகளை பெற்று எடுக்க முடியும். ஆகவே நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். நம் குழந்தைகள் அறிவாற்றல் மிக்க, ஆரோக்கியமாக இருக்க நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
பழங்கள், தானிய வகைகள், பாசிப்பயிறு, கொண்டக்கடலை, கீரை வகைகளான, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, முருங்கைக்கீரை, பேரிச்சம்பழம், நெல்லிக்காய், ஆப்பிள், பால், முட்டை இது போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்ணும்போது நம்மை நோய் ஏதும் அண்டாது. ஆகவே, பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
What's Your Reaction?






