மாணவ, மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்.., பாராட்டு மழை.!

தூத்துக்குடி டூ சென்னைக்கு மாணவ, மாணவிகளை விமானத்தில் கூட்டி சென்ற ஆசிரியரை கவிஞர் செல்வராஜ் வாழ்த்தினார்.!
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். தூத்துக்குடி அருகில் உள்ள பண்டாரம்பட்டியில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ந் தேதி அப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் 7 பேர், இரண்டு பெற்றோர்கள் மற்றும் இவர் உட்பட 20 பேர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கூட்டி சென்றார்.
மாணவர்களின் கனவை நிறைவேற்ற ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1,50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், மிருக காட்சியையும் பார்க்க வைக்க ஏற்பாடு செய்தது மிகச்சிறப்பான செயல் என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில், கவிஞர் செல்வராஜ், மாணவர்களின் கனவை நிறைவேற்றிய ஆசிரியர் நெல்சன் பொன்ராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதோடு, அவருக்காக சிறப்பு கவிதை ஒன்றை வாசித்து பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து, கலைவளர்மணி சக்திவேல் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்வின்போது மாணவ, மாணவிகள் ஆரவாரத்துடன் கைதட்டி நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
What's Your Reaction?






