கேள்வி கேட்டா அதுக்கும் சேர்த்து பைன் போடுவேன்.. மிரட்டிய காவலர்.!

எதுக்கு சார் தப்பா பைன் போட்டீங்க அப்படின்னு கேட்டா அதுக்கும் சேர்த்து பைன் போடுவேன்.. மிரட்டும் காவலர்., செய்துங்கநல்லூர் காவல் நிலைய சோதனை சாவடியில் நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.
தூத்துக்குடி மாவட்ட எல்கையான செய்துங்கநல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை போலீசார் சோதனை செய்வது வழக்கமான ஒன்று தான். இந்தநிலையில் குரு என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோ காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி லைசன்ஸ் மற்றும் வண்டியின் ஆர்.சி.புக் இல்லை என்று அபராதம் விதித்துள்ளதாக அந்த இளைஞர் கூறுகிறார்.
என்னுடைய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் மட்டும் தான் இல்லை. அதற்கு அபராதம் 500 மட்டும் தான். ஆனால் அபராதத்தை மாற்றி போட்டு விட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் காவலர் கூறுகிறார். அந்த அபராத சீட்டில் லைசன்ஸ் இல்லை என்று அபராதம் விதித்துள்ளதை சுட்டிக்காட்டும் இளைஞர் தான் லைசன்ஸ் வைத்துள்ளதாக கூறுகிறார். அந்த நேரத்தில் குறுக்கிடும் காவலர் நீங்கள் ஆர்.சி.புக் வைக்கவில்லை என்கிறார். அதற்கும் தான் ஆர்.சி.புக் காண்பித்தேன் அல்லவா? என்று காவலருடன் கூறுகிறார். இதற்கும் சேர்த்து பைன் போடுவேன் என்று மிரட்டும் தோனியில் காவலர் பேசுகிறார்.
இதற்கிடையில் தனது கையில் வைத்திருக்கும் டிஜிட்டல் மீட்டரில் முழுமையாக சோதனை செய்து பார்த்தபோது அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே பல அபராதங்கள் உள்ளதாகவும் அதை சேர்த்து தான் கூறியதாக அதில் காவலர் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
What's Your Reaction?






