தவெக 2ம் ஆண்டு தூத்துக்குடியில் கட்சியினர் கொண்டாட்டம்..!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, கேக் வெட்டி, உணவு வழங்கினார் தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார்..!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இந்தநிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு 2ம் ஆண்டு துவக்க விழாவை தமிழகம் முழுவதுமுள்ள தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகர், தாய் நகர் அருகே உள்ள சுனாமி காலனியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது. முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அருள்ராஜ், ரீகன், ஸ்டீபன், ஆனந்தவேல், வினிங்டன், ஜூலியட், உஷா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






