டாஸ்மாக் மதுபான குடோனில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள். விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு.!

சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான குடோனில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அரசு டாஸ்மாக் அலுவலகத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 4 நாட்களாக மதுபானம் ஏற்றிவந்துள்ள லாரிகள், உரிய பில் இல்லாமல் நின்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அமலாக்கத்துறை டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்த நிலையில் மதுபானங்களை ஏற்றிய நிலையில் லாரிகள் அணிவகுத்து நிற்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழக அரசிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தக்கூடும். ஆகவே, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, முறைகேடு ஏதும் நடைபெற்றுள்ளதா? என்பதை உடனடியாக தீவிரவிசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, எந்தவொரு சட்டவிரோத செயல்களும் நடைபெறாதவாறு உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
உடன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம்ரமேஷ், மாவட்டபொதுச்செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்டதுணைத்தலைவர்கள் செல்வராஜ், சிவராமன், வாரியார், தங்கம், மாவட்ட செயலாளர் வீரமணி, சங்கர், அர்ஜுன் பாலாஜி, பாப்பா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மண்டல தலைவர்கள் மாதவன், லிங்கசெல்வம், சுதா, ராஜேஷ்கனி, சங்கர், சரவணன், சிவஜோதிபாண்டியன், பேச்சிதுரை, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், சின்னதம்பிபாண்டியன் முருகன் உள்ளிட்ட கட்சியினர் பலர் இருந்தனர்.
What's Your Reaction?






