தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் மின்கசிவு.,பல நூறு கோடி ரூபாய் இழப்பு.!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் மின்கசிவு., 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறையினர்., பல நூறு கோடி ரூபாய் இழப்பு.!
தூத்துக்குடி மாவட்டம், வஉசி துறைமுகம் அருகே தெர்மல் நகர் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளை கொண்டு 210 மெகா வாட் உற்பத்தித்திறன் என மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில, நேற்று இரவு 11 மணி அளவில் உயர் மின்னழுத்தம் காரணமாக 1 வது, 2 வது யூனிட்களின் கட்டுப்பாட்டு அறை அதாவது, குளிரூட்டும் பகுதி அருகே உள்ள கேபிள் கேலரி என்று அழைக்கப்படும் அனல்மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கக்கூடிய மின்சார வயரில் மின் கசிவு ஏற்பட்டு அனல் மின் நிலையத்தில் கருமூட்டத்துடன் தீயானது பரவியது. இந்த தீயை அனல் மின் நிலையம் தீயணைப்பு வீரர்கள், அருகே உள்ள துறைமுகம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இந்த தீவிபத்தில் மின்சார வயர்கள் மற்றும் பிரேக் ஆயில் ஆகியவை இருந்ததால் தீ தொடர்ந்து எரிந்து வந்தது. இந்நிலையில், திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர். சரவணபாபு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் க.கணேசன் , உதவி மாவட்ட அலுவலர்கள் இராஜு மற்றும் நட்டார் ஆனந்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கரும்புகையால் தீயை அணைக்கும் பணியில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. இதனால் கூடுதலாக 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் போராடினர். மேலும், இந்த கரும்புகையில் சிக்கி இரண்டு தீயணைப்பு வீரர்களான, தங்க மாரியப்பன், வெயிலுந்த ராஜ் ஆகிய இருவரும் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தீவிபத்து காரணமாக அனல் மின் நிலையத்தின் மின்சார வயர்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ள நிலையில், பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
இந்த தீ விபத்தால் தலா 210 மெகா வாட் வீதம் 3 அளகுகளில் மொத்தம் 410 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி மீண்டும் 2 அலகுகளில் மின்சார உற்பத்தி செய்வது மிக கடினமான சூழ்நிலையாக இருக்கும் என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் இளம்பகவத் கூறியுருப்பதாவது: அனல் மின் நிலையத்தில் 1, 2வது அலகு கேபிள் வயறுகளில் முழுமையாக தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துணையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 2, 3 அலகுகளில் தீ பரவக்கூடியதை தடுத்து நிறுத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தெர்மல் அனைத்து பொறியாளர்களும் உள்ளே செல்வதற்கு மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக தீயணைப்பு கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தண்ணீர்கள் தேவைக்காக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் துறைமுகங்களில் கொண்டு வரப்பெற்றுள்ளன. தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. அலகு 1,2 நிறுத்தப்பட்டுள்ளன. 3, 4 அலகுகள் பாதுகாப்பாக உள்ளன.
எங்கெல்லாம் தீ எரிகிறதோ அதை அடைப்பதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீ எரியக்கூடிய பகுதிகளில் உள்ளே செல்வதற்கு கட்டிடங்களை இடிப்பதற்கு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வயர்கள் எரிந்துள்ள நிலையில் இறுதி கட்ட தீயை அணைக்க ஏற்பாடு நடை பெறுகின்றன என்றார்.
What's Your Reaction?






