பாஜக தலைவர் அண்ணாமலையின் கட்சி பதவி பறிக்கப்பட உள்ளது... அமைச்சர் கீதா ஜீவன் போட்ட குண்டு..!
தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்,
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வெளியில் வந்து புகார் கூறியதற்கு நன்றி., பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வரவேண்டும் அப்போதுதான் குற்றம் செய்து விடாத வண்ணம் முதலமைச்சர் உருவாக்கித் தருவார்.. பெண்கள் குழந்தைகளுக்கு குற்ற செயல்கள் நடந்தால் பெண்கள் பெற்றோர்கள் புகார் கொடுக்க தயங்க கூடாது..
பெண்களின் நனுக்காக அத்தனை திட்டத்தையும் முதலமைச்சர் உருவாக்கி தருகின்றார்.. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. சமூக நலத்துறை, காவல்துறை இணைந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது..
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் கூறினால் வழக்கு போடப்படும்.. யார் என்ற விவரம் காக்கப்படும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.. பொள்ளாச்சியில் அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தில் புகார் கொடுக்கப்படவில்லை வழக்கும் பதியவில்லை.. அதிமுக ஆட்சிக்காலத்தில் குற்றம் செய்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படமாட்டாது.. ஆனால் திமுக ஆட்சியில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரை நான்கு மணி நேரத்தில் கைது செய்கின்றார்கள். விசாரணை செய்கின்றார்கள்.. அவர் தான் குற்றவாளி என்று நிரூபணம் ஆகிறது.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி அந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு..,
பாஜக தலைவர் அண்ணாமலை பதவியை தூக்கப் போகிறார்கள் என்று கூறுகின்றார்கள். அதற்காகத்தான் 48 நாள் விரதம் இருக்கின்றார்..பாஜக ஆட்சியில் மணிப்பூர் ஒன்றே போதும்.. எந்த அளவுக்கு பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். துன்பப்படுத்தப்பட்டார்கள். அங்கு பாஜக ஆட்சிதான்.. ஆனால், தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு அரணாக இருக்கின்றார்..
அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கி கொண்டே போகலாம் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பாதம் தாங்கியாகவே இன்னும் இருக்கின்றார்.. ஞானசேகர் என்பவர் திமுக கட்சி அல்ல..., இதனை பலமுறை சொல்லியாச்சு.. இருந்தாலும் திமுக காரர் என்கின்றார்கள்...
தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற கூடாது தடுத்தாக வேண்டும்.. இந்த வகையில் விழிப்புணர்வு உண்டாகப்பட்டு வருகிறது என்ற அவர், தூத்துக்குடியில் 29, 30 முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்..
What's Your Reaction?