தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..., சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான தென்மலை தென்குமரன் என்ற வாலிபர் கைது.. பெண்கள் அச்சம்.

Dec 27, 2024 - 13:59
Dec 27, 2024 - 14:08
 0
தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் கங்கா பரமேஸ்வரி நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பூங்கா ஒன்று உள்ளது. 

இந்த பூங்காவில் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்., இந்நிலையில், அப்பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டியும், ஆபாசமான வார்த்தைகளை கூறியும் பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்ற நபரிடமிருந்து உடனடியாக தப்பிய அந்தப் பெண் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையுடன் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த தென்மலை தென்குமரன் (40). என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது தருவைக்குளம், சிப்காட் மற்றும் புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒருசில பூங்காக்களில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இடையூறாக மதுபானம் குடிப்பதும், புகை பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டுமென கோரிக்கை வழுக்கிறது..

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow