ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.!

Feb 20, 2025 - 11:41
 0
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆதராவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி எந்த விதமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை - மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. மேற்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதராவாளர்களோ, பல்வேறு நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களோ ஒன்று கூடி எந்த விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow