"எம்.ஜி.ஆர் எங்கே?” – போஸ்டரில் மிஸ்ஸான நிறுவனர்!
தூத்துக்குடி: மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எட்டையபுரம் பகுதியில் கோலப்போட்டி நடத்த அதிமுகவினர் திட்டமிடப்பட்டுள்ளனர்..
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியை எட்டையபுரம் நகர கழக செயலாளர் ராஜ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக அடிக்கப்பட்ட போஸ்டர் தான் இப்போது பேசுபொருளாகி உள்ளது.
காரணம் என்னவென்றால்.., அந்த போஸ்டரில் கட்சியை உருவாக்கிய நிறுவன தலைவர் எம்ஜி ராமசந்திரன் அவர்களின் படம் காணவே இல்லை! "அம்மா பிறந்த நாள் போஸ்டர் ஓகே… ஆனால் கட்சியை தொடங்கியவர் எங்கே போனார்?” என்று சமூக வலைதளங்களில் சிலர் காமெடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதைப் பார்த்த சிலர், “போஸ்டர் அடிக்கும்போது பிரிண்டிங் மெஷின் ‘எம்.ஜி.ஆர்’ பக்கத்தை ஸ்கிப் பண்ணிட்டதா என்ன?” என்று நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர்.
இதனால், “போஸ்டரில் மிஸ்ஸான எம்.ஜி.ஆர்” என்று அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
செய்தியாளர் மு.மணிகண்டன்