ராணுவ வீரரின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் மூன்றாம் இடம்.!

ராணுவ வீரரின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் மூன்றாம் இடம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பொன் மாடசாமியின் மகள் வனிதா மதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், ஓட்டப்பிடாரம் வட்டார அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பொன் மாடசாமி தற்போது டெல்லியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களின் மகள் வனிதா மதி, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், வனிதா மதி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களிலும் தலா 95 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி வனிதா மதி கூறுகையில், “இந்த வெற்றி எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. என்னுடைய பள்ளி, ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள் அளித்த ஊக்கமே இந்த சாதனைக்கு காரணம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 12-ம் வகுப்பிலும் மாநில அளவில் முதலிடம் பெற முயற்சி செய்வேன். மேலும், பெரிய டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்,” என்றார்.

மேலும், தனது வெற்றிக்கு காரணமான ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சுவேதா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவர்கள் கவின்ராம் மற்றும் பிரதாப் சிவமுத்து ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.