கேட்டரிங் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய திருநங்கை.!

கேட்டரிங் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய திருநங்கை.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் அஜய் தேவகுமாரன் (19) இவர் கோயம்புத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் கேட்ரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். 

3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று கல்லூரி செல்வதற்காக தனது கிராமத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, பேருந்து நிலையத்தில் வைத்து திருநங்கை அபர்ணா (26), என்பவர் அஜய் தேவகுமாரனை திடீரென சிறிய கத்தியை கொண்டு கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து ரத்த காயங்களுடன் இருந்த அஜய் தேவகுமாரனை அருகே இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது., தூத்துக்குடி மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கை அபர்ணா அஜய் தேவகுமாரனின் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது திடீரென அஜய் தேவகுமாரன் ஓரு காட்டு பகுதிக்கு கூட்டி சென்று திருநங்கையின் செல்போனை பறித்து சென்றுள்ளார். 

இந்த நிலையில் தான் இன்று திருநங்கை அபர்ணா அஜய் தேவகுமாரனை புதிய பேருந்து நிலையத்தில் ஏதேர்ச்சையாக சந்தித்துள்ளார்..

அப்போது, பறித்து சென்ற செல்போனை திருப்பி கேட்டுள்ளார் திருநங்கை அபர்ணா., அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவகுமாரனை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.. 

பின்னர், போலீசார் திருநங்கை அபர்ணாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக திருநங்கை கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...