திருமணம் நிறுத்தம்: தூத்துக்குடி அருகே பரபரப்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இரு குடும்பத்தினராலும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திருமண தரகர், மணப்பெண் குடும்பத்தினரிடம் மாப்பிள்ளையின் காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சந்தேகமடைந்த மணப்பெண் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர், இரு குடும்பத்தினரும் சமரசமாக ஆலோசித்து திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் மு.மணிகண்டன்