வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லுரி மாணவன்.!

வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லுரி மாணவன்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆதி லிங்கம் இவருக்கு மூன்று குழந்தைகள்உள்ளனர். இதில் மூத்த மகன் லிங்கதுரை திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

லிங்கதுரை பொறியியல் கல்லூரிக்கு செல்லாமல் படிக்க விருப்பம் இல்லாமல் கிராமத்திலேயே ஊதாரியாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர் லிங்க துரையை அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர்..

இதனால் மனமுடைந்த லிங்கதுரை இன்று அதிகாலை ஆதனூர் கிராமத்தில் அவரின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எப்போதும் வென்றான் காவல் துறையினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட லிங்கதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.