தூத்துக்குடியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை., 3 பேர் கைது.!

தூத்துக்குடியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை., 3 பேர் கைது.!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.

கடந்த 24ஆம் தேதி, ஒரு பெண் (அடையாளம் வெளியிடப்படவில்லை) தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, தனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

மேலும், ரூ.2,500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்களை குற்றவாளிகள் பறித்துச் சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 49/2026 என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, BNS சட்டத்தின் பிரிவுகள் 296(b), 126(2), 87, 115(2), 70(1), 309(4) மற்றும் 351(3) ஆகியவற்றின் கீழ் போலீசார் விசாரணை தொடங்கினர்.

தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த மோகித் (25), நசரேன் மகன் ரித்தீஷ் (19), ஜெயக்குமார் மகன் திலோத் பெர்லின் (21) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத் துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.