தூத்துக்குடி சிவன் கோவிலில் காலணிகள் வைக்க வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி.!

தூத்துக்குடி சிவன் கோவிலில் காலணிகள் வைக்க வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது காலணிகளை வெளியே கழற்றி வைப்பது வழக்கமாக உள்ளது.

ஆனால், கோவில் வளாகத்தில் பக்தர்கள் காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தனி இடம் ஏற்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோவில் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் காலணிகளை கழற்றி வைக்கும் நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், கோவில் வெளியே பூக்கடை நடத்தி வரும் சிலர், "இங்கு செருப்புகளை வைக்கக் கூடாது" என்று பக்தர்களிடம் கூறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், காலணிகளை எங்கு வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் பக்தர்கள் அவதியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பக்தர்கள் விளக்கம் கேட்டபோது, "இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் சாமுவேல் ராஜ் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரிடம் தெரிவித்து விட்டோம்" என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

இதன் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக காலணிகள் வைக்கும் தனி இடத்தை கோவில் நிர்வாகம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோவில் நிர்வாகம் என்ன விளக்கம் அளிக்கிறது? பக்தர்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.