பாஜக, அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்து வருகின்றன. நீண்ட காலமாக திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததுடன், சமீபத்தில் மத்திய அரசால் நோட்டரி பப்ளிக்காக அங்கீகரிக்கப்பட்ட வாரியார், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராகவும் இருந்து வந்தவர்.
தமிழக வெற்றி கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆதரவாளரான நான்சி மற்றும் அதிமுகவை சேர்ந்த முனியசாமி ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த இணைவு தூத்துக்குடி மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரவிருக்கும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, இந்த இணைவு மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
செய்தியாளர் மு.மணிகண்டன்