தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலை.,கடுமையான தீர்ப்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மார்ச் மாதம் 11-ம் தேதி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த தர்ம முனிஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்...
பின்னர், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று (25.05.2026) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ப்ரீத்தா தெரிவித்து இருந்தார்..
அதன்படி, தர்ம முனிஸ்வரன் மதுரை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் அழைத்து வரப்பட்டான். அவனை காவல்துறையினர் சுற்றி வளைத்து பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குள் அழைத்துச் சென்றனர்..
பின்னர், தர்ம முனீஸ்வரனிடம் தீர்ப்பு வழங்க உள்ள போக்சோ நதிமன்ற நீதிபதி பிரித்தா முன்பு காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.. குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்றும், உங்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்... எதுவும் சொல்லாமல் இருந்தான் தர்ம முனீஸ்வரன்.. அப்போது தர்ம முனீஸ்வரனிடம் குடிக்க தண்ணீர் எதுவும் வேண்டுமா என கேட்டார் அப்போதும் அமைதியாக நின்றான் தர்ம முனிஸ்வரன். பின்னர் நீதிபதி ப்ரீத்தா தர்ம முனிஸ்வரனை குற்றவாளி என்று அறிவித்தார்..
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்த வழக்குக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது..
செய்தியாளர் மு.மணிகண்டன்