திமுகவிற்கு சவால் விடுத்த காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்., கடும் சாடல்.!

திமுகவிற்கு சவால் விடுத்த காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்., கடும் சாடல்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை கூறி இருக்கிறார்.. அப்போது அவர் பேசியதாவது.,, “திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்தது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் துரோகி, ராகுல் காந்தி துரோகி என்று திமுக தீர்மானம் போடுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் இல்லையென்றால் திமுக கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்க முடியாது..

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 30 பேர் திமுகவில் இணைந்தது குறித்து பேசும்போது, “தல திமுக என்றால், அந்த வால் தான் இவர்கள். அவர்களை போன்று பல பேர் திமுகவுக்கு சென்றிருப்பது ராகுல் காந்தி எதிர்பார்த்ததே. காங்கிரஸ் தூய்மையாக வேண்டும் என்பதே அவரது நோக்கம்..

திமுக இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பாஜகவுக்கு காங்கிரஸ் வேலை செய்கிறது” என்று கூறியதை சுட்டிக்காட்டிய அவர், “திமுகவின் மாப்பிள்ளை சபரீசன் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லையா? துர்கா ஸ்டாலினும் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதேபோல், “இந்தியாவின் முகம் ஸ்டாலின் என்றால் அவர் ஏன் கொளத்தூரில் தோற்றார்? இந்தியாவின் முகம் ராகுல் காந்தி மட்டும் தான். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்” என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும் என கூறிய அவர், திமுக கூட்டணி இல்லாமல் இருந்தால் 12 முதல் 14 சதவீத ஓட்டுகள் வாங்கினாலே பெரிய விஷயம் தான்.

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “25 கட்சிகள் கூட்டணியில் இருந்த திமுக, 107 தொகுதிகள் வென்ற விஜய்யை பார்த்து, ‘எங்களை வைத்துதான் ஆட்சி நடத்துகிறீர்கள்’ என்று கூறுகிறது. திமுக எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று ஆட்சியை பிடித்தால், நான் அண்ணா அறிவாலயத்தில் சம்பளமில்லாத வாட்ச்மேனாக சேர்ந்து கொள்கிறேன்” என்று சவால் விடுத்தார்.

காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது பாஜக கொடுத்த அசைன்மென்ட். காங்கிரஸ் இல்லையென்றால் திமுக ஒரு காலி டப்பா” என்று விமர்சித்தார்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவை விஜய் வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட அலட்சியமும் வெறுப்பும் தான் உண்மையான காரணம்..

திமுக எப்படி தோற்றோம் என்று ஆராயாமல், எப்படி வெற்றி பெற்றோம் என்று ஆராய வேண்டும். திமுக இல்லாததால் காங்கிரஸ் தனித்துவ கட்சியாக வளரும். “2ஜி வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால்தான் பாஜக திமுகவை கட்டுப்படுத்துகிறது..

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசிய அவர், லட்சக்கணக்கானோர் இறந்ததாக கூறினாலும், சுமார் 70 ஆயிரம் பேர்தான் உயிரிழந்தனர். அதற்குப் பிறகும் அங்குள்ள மக்களுக்கு மறுவாழ்வு அளித்தது காங்கிரஸ் அரசே. வீட்டு வசதி உள்ளிட்ட பல உதவிகள் செய்யப்பட்டுள்ளன..

திமுகவை எச்சரிக்கும் வகையில், “காங்கிரஸ் குறித்து இனி திமுக பேசக்கூடாது. திமுகவுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என்று அவர், மின் தடை பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, “பாஜகவின் கள்ளக் குழந்தை திமுக; செல்லப் பிள்ளை அதிமுக” என்று சர்ச்சைக்குரிய வகையில் அவர் விமர்சனம் செய்தார்.