புதிய அரசியல் பயணம் தொடங்கிய அண்ணாமலைக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு.!

புதிய அரசியல் பயணம் தொடங்கிய அண்ணாமலைக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு.!

தூத்துக்குடி: அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்.!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, பாஜக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், இளைஞர்களை அரசியலுக்கு தயார்படுத்தும் நோக்கில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். "We The Leaders" என்ற பெயரில் www.wetheleaders.org இணையதளத்தின் மூலம் இந்த இயக்கம் செயல்படவுள்ளதாகவும், வரவிருக்கும் பொதுத்தேர்தலை சந்திக்கும் வகையில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சியாக இது அமையும் என்றும் அவர் வெளியிட்ட காணொளி செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் அண்ணாமலை ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலையின் ஆதரவாளர்களான ரமேஷ் கண்ணன், ராஜீ ஜெயபாண்டி, AL சரவணன், வெங்கடேஷ் ராமையா, பகவத் சிங், கணேஷ் சண்முக ராஜ், சதீஸ் கண்ணன், அருண் குமார், ஆகியோர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் எனவும் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.