தமிழக முதல்வர் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.!

தமிழக முதல்வர் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “தமிழக முதல்வர் விஜய் நாட்டிற்காக, மக்களுக்காக, மண்ணிற்காக என்ன செய்தார்? விஜய் பட்டினிப் போராட்டம் நடத்தினாரா? உரிமைப் போராட்டம் நடத்தினாரா? எதையும் அவர் செய்யவில்லை.

ஜோசப் விஜய்க்கு குறுவை சாகுபடி என்றால் என்ன தெரியுமா? டெல்டா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து தெரியுமா? காவிரி நீர் குறித்து பேசினால், காவிரி தண்ணீராவது ஏதாவது. எங்கள் அண்ணி திரிஷா பற்றி யார் பேசினார்கள் என்று கேட்கிறார்கள்.

விஜய்யின் கடைசி படம் என்பதால் கட்சியினர் அழுகிறார்கள். தினமும் தலைமைச் செயலகத்தில் நடிக்கிறாரே, அங்கே போய் பாருங்கள் என்று நான் கூறினேன். சிரித்தால் கல்யாண வீடு; அழுதால் ஏழவு வீடு. தியேட்டரில் போய் அழுதால் அது ஏழவு வீடுதான். நீங்கள் அழுதால் விஜய் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்; அழாதீர்கள்” என்றேன்.

நேற்று பிறந்த டவுசர் பையன் அதிமுகவை அழிக்க நினைக்கிறான். அதிமுக விசுவாசத் தொண்டர்களின் வயிறு எரியும்படி கட்சியை அபகரிக்கவோ, அழிக்கவோ நினைத்தால் வம்சமே நாசமாகப் போகும்” என கடுமையாகப் பேசினார்.

தேர்தலுக்கு முன்பு விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி எனக் கூறியதாகத் தெரிவித்த அவர், “லூசு பையன் ஏதோ சொல்கிறான் என்று அப்போது விட்டுவிட்டோம். ஆனால் தற்போது முதல்வராகிவிட்டார்” என விமர்சித்தார்.

அவரது பேச்சு கூட்டத்தில் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..