தூத்துக்குடி மாநகரில் சுவர்களுக்கு புதிய அழகு.,

தூத்துக்குடி மாநகரில் சுவர்களுக்கு புதிய அழகு.,

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரின் பொது சுவர்களை அழகுபடுத்தும் வகையில், பல்வேறு பகுதிகளில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்து, மாநகரின் அழகுபடுத்தும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சுவர் ஓவியங்களை சேதப்படுத்துவோர் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நகர அழகுபடுத்தும் பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னார்வலர்கள், பொதுமக்கள், கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ளுமாறும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.