தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் டி20 உலகக் கோப்பை திரையிடல்., பொதுமக்கள் பெரும் திரள்.!
தூத்துக்குடி: டி-20 உலக கோப்பை இறுதி போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரை இறுதியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி மோதுகின்றன. இந்தப் போட்டி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி தன்னுடைய பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார்கள்..
இந்த நிலையில், டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் பெரிய எல்இடி திரையில் முத்துநகர் கடற்கரை பூங்காவில் சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியை பொதுமக்களோடு சேர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, சார் ஆட்சியர் பிரபு, மற்றும் அரசு துறை அதிகாரிகள் உட்பட ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் திருவிழா போன்ற சூழல் நிலவி வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
செய்தியாளர் மு.மணிகண்டன்