தூத்துக்குடியில் அதிரடி.,8 கடைகளுக்கு ரூ.1,600 அபராதம்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் மெயின் ரோடு பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மொத்தம் 18 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 8 கடைகளுக்கு மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமீறல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
துப்பறிவாளன் மணி