TVK கொடிகள் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகள் அல்ல புறக்கணிக்கிறதா?"
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் 25-வது வார்டுக்கு உட்பட்ட சிந்தா யாத்திரை மாதா கோவில் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த கடற்கரை பகுதியில் நீண்ட நாட்களாக மீன் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் வீட்டு கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அன்றாடம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து மீனவரும், தமிழக வெற்றி கழகத்தின் கிழக்குப் பகுதி செயலாளருமான அண்டோ கூறுகையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது குப்பைகளை அகற்றி வந்தனர். ஆனால் தற்போது அந்த பணிகள் நடைபெறவில்லை.
மேலும், அப்பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகள் பல இடங்களில் கட்டப்பட்டிருப்பதால், அதன் காரணமாகவே மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதியை புறக்கணித்து குப்பைகளை அகற்ற மறுக்கிறதா? என்ற சந்தேகம் வழுக்கிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இந்த 25-வது வார்டு கவுன்சிலர் எடிண்டா காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று, தற்போது திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, சுகாதாரமான சூழலை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
துப்பறிவாளன் மணி