“மக்கள் குறைகள் தீர்க்க மாநகராட்சி புதிய முயற்சி.!

“மக்கள் குறைகள் தீர்க்க மாநகராட்சி புதிய முயற்சி.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, மின்விளக்கு, குடிநீர் விநியோகம், மழைநீர் வடிகால், பொது சுகாதார மருத்துவ சேவைகள், பாதாள சாக்கடை திட்டம், அறிவியல், ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மாநகராட்சி சேவைகள் முழுமையாக சென்றடையும் வகையில், ஏதேனும் குறைபாடுகள் அல்லது புகார்கள் இருப்பின் அவற்றை மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக பதிவு செய்திடும் நோக்கில், 1800 203 0401 என்ற கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு தங்களது குறைகள் மற்றும் தேவைகளை பதிவு செய்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.