தவெக கட்சியையும், கட்சித் தலைவரான விஜய்யை-யும் கடுமையாக சாடிய தூத்துக்குடியின் இரு அமைச்சர்கள்.!

தவெக கட்சியையும், கட்சித் தலைவரான விஜய்யை-யும் கடுமையாக சாடிய தூத்துக்குடியின் இரு அமைச்சர்கள்.!

தூத்துக்குடியில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக சாடியுள்ளனர்.

தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறும் போது, விஜய் தமிழக மக்களுக்கு, இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, மீனவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தாரா? 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்றார். 

2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்கு? புதிய கட்சி எது வந்தாலும் திமுகவை தான் முதலில் எதிர்க்கின்றார்கள். திமுக மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம், மக்கள் நேசிக்கின்ற இயக்கம். ஆகவே திமுகவை சுட்டிக் காட்டுவார்கள். திமுக பாரம்பரிய கட்சி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்காக எப்போதும் அவர்களின் உயர்வுக்கு துணை நிற்கும். ஆகவே திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது, அசைக்க முடியாது. 

நடிகர் விஜய் எங்கு சென்றாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. காரணம் என்ன, என்ற கேள்விக்கு? நடிகர்கள் வந்தால் கூட்டம் இருக்க தான் செய்யும். 

அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கின்றேன் என்று விஜய் கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்கு? இவ்வளவு காலத்திற்கு பின்பு தற்போது தான் அவருக்கு அறிவு வந்ததா, இதற்கு முன்னர் எங்கே சென்றார். அவர் சம்பாதித்த பணத்தை எங்கே வைத்துள்ளார். உதாரணத்திற்கு எம்ஜிஆரை விஜய் கூறுகின்றார்.. எம்ஜிஆர்-க்கும், விஜய்க்கும் ஏணி வைத்தால் கூட எட்டுமா., எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர். அண்ணா வழித்தோன்றலால் வந்தவர். மக்களோடு, மக்களாக இருந்து தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு அளித்தவர் எம்ஜிஆர். விஜய் என்ன செய்திருக்கின்றார்.

தூத்துக்குடிக்கு விஜய் வருகை தரும் போது திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கின்றதா என்று கேள்விக்கு? நாம் எதிர்ப்பு தெரிவிக்க தேவையில்லை.. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார்.

(அமைச்சர் கீதாஜீவன் பேட்டி.)

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விஜய் வருகின்ற இடம் எல்லாம் கூட்டம் அதிகமாக வருவதாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும்.. வரையறை இல்லாமல் இருக்கிறது.. அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. விரைவில் கற்று கொள்வார்கள் என்றார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி மற்றும் அரியலூரில் நேற்று (செப்14) மக்களை சந்தித்து பாஜக மற்றும் திமுகவை கடுமையாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இரு அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விஜய்யை கடுமையாக சாடியது பேசும் பொருளாக மாறியுள்ளது...