28 வகை மூலிகைகள் கலந்த காஷ்மீர் காவா டீ தூத்துக்குடியில் பிரபலமாகி வருகிறது..
தூத்துக்குடி: காஷ்மீரில் பிரபலமாக கருதப்படும் இயற்கை மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியமான காஷ்மீர் காவா டீ தூத்துக்குடியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காஷ்மீரில் பிரபலமான பாரம்பரிய பானமாக கருதப்படும் காஷ்மீர் காவா டீ, தற்போது தூத்துக்குடி மாநகரில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தூத்துக்குடி சிதம்பர நகர் மேற்கு பகுதியில், சக்தி விநாயகா பள்ளி எதிரே அமைந்துள்ள இந்த கடையில், பக்கீல் புரத்தைச் சேர்ந்த யூசுப் செரிப் என்பவர் இந்த பாரம்பரிய டீயை விற்பனை செய்து வருகிறார். இந்த கடை தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இந்த காவா டீயில் பெரிய சீரகம், சின்ன சீரகம், கருஞ்சீரகம், சாய் சீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, சுக்கு, மல்லி, மிளகு, முருங்கைக்கீரை, முந்திரி, பாதாம், பேரிச்சம் பழம், காய்ந்த திராட்சை, சியா விதை, சூரியகாந்தி விதை, ஆலிவ் விதை, பூசணி விதை, எள்ளு, கொள்ளு, கருப்பு உளுந்து, அத்திப்பழம், குங்குமப்பூ, காய்ந்த நெல்லி, தேன், நாட்டு ரோஜா உள்ளிட்ட 28 வகையான மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இதுகுறித்து வியாபாரி யூசுப் செரிப் கூறுகையில்,“இது முழுமையாக கெமிக்கல் இல்லாத இயற்கை பானம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவரும் அருந்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் இந்த டீ அருந்திய பின் பித்தம் வெளியேறியதாகவும், தினமும் வந்து அருந்துகிறார்.
காஷ்மீரில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘கூஜா’ என்ற பாரம்பரிய பாத்திரத்தில் இந்த டீ தயாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் இந்த டீ, தூத்துக்குடியில் ரூ.30க்கு வழங்கப்படுகிறது. இதற்கு காரணம், இதில் சேர்க்கப்படும் பல இயற்கை பொருட்கள் தமிழகத்திலேயே கிடைப்பதால் விலை குறைவு.,
செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் இந்த காஷ்மீர் காவா டீ, இந்தியாவின் பல பகுதிகளில் பிரபலமாகி வரும் நிலையில், தூத்துக்குடியிலும் தற்போது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பு : இந்த செய்தி வெளியிடப்படுவதன் முக்கிய நோக்கம், மக்கள் கெமிக்கல் கலந்த செயற்கை பானங்களை தவிர்த்து, இயற்கை மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியமான பானங்களை தேர்வு செய்து அருந்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.
செய்தியாளர் மு.மணிகண்டன்