பத்திரிகையாளர்கள்–போலீசார் மோதல் எதிரொலி: தூத்துக்குடி எஸ்.பி. அபிஷேக் குப்தா பணியிட மாற்றம்!

பத்திரிகையாளர்கள்–போலீசார் மோதல் எதிரொலி: தூத்துக்குடி எஸ்.பி. அபிஷேக் குப்தா பணியிட மாற்றம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் திபு கடந்த 20ந் தேதி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டார் இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி திபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இருந்தும், ஏ.டி.எஸ் பி திபு மீது எந்தவித நடவடிக்கையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த அபிஷேக் குப்தாவை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த சிவ பிரசாத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..