ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு., – முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல்..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு., – முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல்..!

தூத்துக்குடி: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பாக வெளியாக இருந்த இப்படம், தணிக்கை தொடர்பான காரணங்களால் தாமதமான நிலையில், தற்போது சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தூத்துக்குடி மாநகரில் உள்ள பாலகிருஷ்ணா, கிளியோபாட்ரா, கே.எஸ்.பி.எஸ். கணபதி கலையரங்கம் மற்றும் பெரிசன் பிளாசா ஆகிய நான்கு திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்ததால், நான்கு திரையரங்குகளிலும் 'ஹவுஸ்புல்' நிலை உருவானது. இதனால் தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்திற்கு தூத்துக்குடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், முதல் நாள் காட்சிகள் முழுமையாக நிரம்பியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.