தூத்துக்குடியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் படுகொலை., கடும் போராட்டம்.!

தூத்துக்குடியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் படுகொலை., கடும் போராட்டம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை குறுக்கு சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 7மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருவதால் வாகனங்கள் மாற்றுச்சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன..

மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை உறவினர்கள் கைவிடவில்லை.

இந்த நிலையில், மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் கார், பேருந்துகள் போன்ற வாகனங்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே கீழ அரசரடி வழியாக தருவைகுளம், குளத்தூர், விளாத்திகுளத்தை சுற்றி எட்டயபுரம் நான்கு வழி சாலையில் இணைந்து மேற்கண்ட ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை காவல் துறையினர் மைக் மூலம் அறிவிப்பு செய்து வாகனங்களை திருப்பி விட்டு வருகின்றனர்.. இந்த மறியல் போராட்டத்தால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாற்று வழியில் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.. கோரிக்கைகள் நிறைவேறும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக போராடி வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

அவர்களது முக்கியமான கோரிக்கையான, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று  கூறி வருகின்றனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது ..