தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளராக வில்லியம் பெஞ்சமின். நடுங்கும் புள்ளிகள்.!

தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளராக வில்லியம் பெஞ்சமின். நடுங்கும் புள்ளிகள்.!

தூத்துக்குடி, போக்குவரத்து ஆய்வாளராக வில்லியம் பெஞ்சமின் நியமனம்., நேர்மைக்கு சொந்தக்காரரான இவரை மாற்றம் செய்ய துடிக்கும் புள்ளிகள்.!

காரணம் என்ன.!

தூத்துக்குடி மாநகரத்தை பொருத்தவரை போக்குவரத்து பிரச்னை என்பது ஓர் தீராத தலைவலி. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மாநகரைப் பொருத்தவரை இரண்டு பிரதான சாலைகள் தான்.. இந்த சாலைகளில் தான் அதிக அளவில் வணிக வளாகங்களும் அமைந்துள்ளன.

இந்த வணிக வளாகத்திற்க்கு வரும் வாகனங்கள் பிரதான சாலைகளை ஆக்கிரமிப்பு செய்வதால் தொடர்ந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத ஓர் சூழ்நிலை. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல் துறையும், மாநகராட்சியும் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். இருந்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..

இந்த நிலையில், தூத்துக்குடி, போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய மயிலேறும் பெருமாள் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார். அதற்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய வில்லியம் பெஞ்சமின் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

இதில், தூத்துக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக வில்லியம் பெஞ்சமின் பதவி ஏற்பதற்கு முன்பாகவே, காவல்துறையில் உள்ள பல்வேறு போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள், வில்லியம் பெஞ்சமின் நியமனத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்களாம்..

அதுமட்டுமா, வணிக வளாகங்களை நடத்தி வரும் பெரும் முதலாளிகள், அரசியலில் கோலாச்சும் ஒரு சிலருக்கு கூட நடுக்கமாம். ஆகவே, தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளராக வில்லியம் பெஞ்சமின் பதவி ஏற்றால் பல்வேறு பிரச்னைகள் (தவறு செய்பவர்களுக்கு) ஏற்படும் என்ற காரணத்தினால் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கதறுகிறார்களாம்..

இதற்கு ஒரே காரணம், அவரின் நேர்மை என்றே கூறப்படுகிறது. ஆம், வில்லியம் பெஞ்சமின் தான் செய்யும் தொழிலில் சரியாக பணியை செய்ய வேண்டும் என்று நினைப்பவராம். எந்த ஒரு பரிந்துரை ரெக்கமண்ட்" (Recommend) அடிபணியாதவர், சட்டப்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். அதற்காக தான் இந்த போர் கொடி.

போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் வந்தால் வில்லங்கம் என்று தவிக்கிறார்களாம் புள்ளிகள்..

இருந்தும், முட்டுக்கட்டைகளை எல்லாம் உடைத்தெரிந்து இன்று காலை பதவி ஏற்று கொண்டார் போக்குவரத்து ஆய்வாளராக...

ஏது எப்படியோ, தூத்துக்குடி மாநகரில் இரு சக்கர வாகனத்தில் அதிக சத்தம் தரக்கூடிய சைரன் வாகனங்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர்களுக்கு மேல் வாகனத்தில் செல்லுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் போன்ற காரணத்தினால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. விதிமுறைகளை மீறி தெரிந்தே தவறு செய்யும் இவர்கள் விபத்துகளில் சிக்குவது மட்டுமில்லாமல், விதிமுறைகளை கடைப்பிடித்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீதும் மோதி விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே, வாகன விபத்தை குறைக்க போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் தூத்துக்குடி மக்கள் மிகவும் வரவேற்பார்கள்..

பாப்போம். பொறுத்திருந்து இவரது பணியை.  

செய்தியாளர் மு. மணிகண்டன்.