திருச்செந்தூர் முருகனுக்கு குவிந்த காணிக்கை – தங்கம், வெள்ளியுடன் பட்டன் போனும்!”

திருச்செந்தூர் முருகனுக்கு குவிந்த காணிக்கை – தங்கம், வெள்ளியுடன் பட்டன் போனும்!”

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கோவில் இணை ஆணையர் ராமு முன்னிலையில் நடைபெற்ற காணிக்கை என்னும் பணியில் உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து மொத்தமாக ரூ.4 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 795 காணிக்கை கிடைத்தது. மேலும், 1 கிலோ 62 கிராம் தங்கமும், 26 ஆயிரத்து 267 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதனுடன் 963 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் இருந்து கிடைத்தன.

மேலும், உண்டியல் காணிக்கைகளில் பழமையான பட்டன் செல்போன் ஒன்று கிடைத்தது பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது