தூத்துக்குடியில் அன்னையர் தின விழா: ஏழை பெண்களுக்கு சேலை, இனிப்பு வழங்கல்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட் நகரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “தாய்மை உதவும் கரங்கள்” அமைப்பின் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது.
அன்னையர் தினம் என்பது தாய்மையின் மகத்துவம், தாய்களின் அன்பு மற்றும் தியாகத்தை போற்றும் நாளாக உலகம் முழுவதும் மே 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழா சிறப்பாக அமைந்தது.
விழாவிற்கு ஸ்ரீ முருகன் ட்ரேடர்ஸ் உரிமையாளரும், தாய்மை உதவும் கரங்கள் அமைப்பின் தலைவருமான ராஜம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் தனதுரைசிங், டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார், சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏழை எளிய பெண்களுக்கு சேலை, கேக் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அன்னையர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டு, தாய்மையின் பெருமை வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக தொண்டர் அணி அமைப்பாளர் ரியாஸ், விஜயகுமார், அஜய், அருண், மணிகண்டன், சதீஷ், முத்துகிருஷ்ணன், மாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்