கவர்ந்து இழுத்த புகைப்பட கண்காட்சி., தூத்துக்குடியில்.!
Photography Exhibition in Thoothukudi
தூத்துக்குடி புத்தக திருவிழாவில் புகைப்பட கண்காட்சி., மக்களை கவர்ந்து இழுத்த அந்த புகைப்படங்கள்., என்னென்ன புகைப்படங்கள்.., ஓர் பார்வை.!
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் "6வது புத்தகத் திருவிழா 2025” தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து 22.8.2025 முதல் 31.8.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த புத்தக திருவிழாவில் தூத்துக்குடி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட கண்காட்சி தருவை மைதானத்தில் தனி அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில், தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத்திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள், வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், விளையாட்டு போன்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளது.
இந்த புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக இருந்த நிலையில் ஒவ்வொரு படங்களும் உயிருட்டும் விதமாகவும், கண்ணை கவரும் வகையில் இருந்ததாலும் பள்ளி மாணவ, மாணவிகள் ரசித்து வருகின்றனர்.